`ஆவினில் வேலை’ ரூ.3கோடி மோசடி வழக்கு – ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் எப்போது?
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டது. ராஜேந்திர பாலாஜிஇந்த உத்தரவுக்கு தடைவிதிக்கக்கோரி ராஜேந்திர பாலாஜி சார்பில் வழக்கறிஞர் ஏ.வேலன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள்…









