Browsing: செய்திகள்

India Vs Pakistan: இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

17-வது சீசன் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், தற்போது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. Source link

உண்மையான மக்களாட்சியை அமைத்திட நம் பணிகளை இன்னும் தீவிரப்படுத்துவோம்; தவெக விஜய் அறிக்கை | TVK vijay says We will intensify our work to establish a true democracy

அந்த அறிக்கையில் விஜய், “இரண்டாவது வாரமாக, மீனவச் சொந்தங்கள் மற்றும் மும்மதங்களையும் போற்றி, மத நல்லிணக்கத்தைப் பேணிக் காக்கும் நம் நாகப்பட்டினம் மாவட்ட மக்களையும், உலகுக்கே உணவூட்டும் உழவர் பெருமக்களாகிய திருவாரூர் மாவட்ட மக்களையும் நேற்று சந்தித்தோம்.நம்மைப் பற்றி, ஆள் வைத்துப் பொய்யான கதையாடல்களைச் செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்.இந்த நடுக்கத்தினாலேயே நாம் நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்கும் பொழுதெல்லாம் யாருக்கும் விதிக்காத…

முகமது பின் சல்மான் சௌதி அரேபியாவில் மிக குறுகிய காலத்தில் அதிகாரத்தை வசப்படுத்தியது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 29 வயதில் முகமது பின் சல்மான் துணை பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டார்.கட்டுரை தகவல்2015 ஜனவரி 23ஆம் தேதி, செளதி அரேபிய அரசர் அப்துல்லா நுரையீரல் புற்றுநோயால் இறந்தபோது, ​​சல்மான் பின் அப்துல்அஜிஸ் புதிய மன்னரானார்.புதிய மன்னர், உளவுத்துறையின் முன்னாள் தலைவர் முக்ரின் பின் அப்துல்அஜிஸை புதிய பட்டத்து இளவரசராக நியமித்தார், அப்போது அவருக்கு வயது 68.மூன்று மாதங்களுக்குப் பிறகு, யாருமே எதிர்பாராத விதமாக புதிய பட்டத்து இளவரரை மன்னர் சல்மான் பதவி…

உண்மையிலேயே இந்த கிரீடத்துக்கு தகுதியானவர்; தாதாசாகேப் பால்கே விருது பெறும் மோகன்லாலுக்கு மாமூட்டி வாழ்த்து | Malayalam Actor Mammootty wishes his colleague Mohanlal

இரண்டாவது மலையாள திரைக் கலைஞன்!இந்த விருதை இதுவரை தமிழில் சிவாஜி கணேசன், கே. பாலசந்தர், ரஜினிகாந்த் ஆகியோர் பெற்றிருக்கின்றனர். மேலும், தெலுங்கிலிருந்து 6 பேரும், மலையாளம் மற்றும் கன்னடத்திலிருந்து தலா ஒருவரும் இவ்விருதைப் பெற்றிருக்கின்றனர்.இந்த நிலையில், 2019-ல் ரஜினிகாந்த் இவ்விருதைப் பெற்ற 6 வருடங்களுக்குப் பிறகு ஒரு தென்னிந்திய நடிகர் மோகன்லாலுக்கு இந்த விருது இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.மோகன்லால் – மம்மூட்டிஇதன் மூலம், மலையாள திரைத்துறையிலிருந்து தாதாசாகேப் பால்கே விருது பெறும் இரண்டாவது நபரானார் மோகன்லால்.300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்…

ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களை தடை செய்த தாலிபன்கள்

பட மூலாதாரம், AFP via Getty Imagesபடக்குறிப்பு, ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்கள் பாடத்திட்டத்திலிருந்து புத்தகங்களை நீக்குமாறு கூறப்பட்டுள்ளன.கட்டுரை தகவல்ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் பாடத்திட்டங்களில் இருந்து பெண்கள் எழுதிய புத்தகங்களை தாலிபன் அரசு நீக்கியுள்ளது. மனித உரிமைகள், பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றை கற்பிப்பதும் புதிய தடையின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.மொத்தம் 680 புத்தகங்கள் “ஷரியா மற்றும் தாலிபன் கொள்கைக்கு எதிரானவை” என்று கூறி நீக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 140 புத்தகங்கள் பெண்கள் எழுதியவையாகும். “வேதியியல் ஆய்வகத்தில் பாதுகாப்பு” (“Safety…

நாளை முதல் அமெரிக்காவில் H-1B விசா கட்டணம் உயர்வு: இந்தியர்களின் வேலை வாய்ப்பு பாதிப்பு|US H-1B visa fee 2025 India, China impact

ஆரம்பத்தில் இருந்தே வெளிநாட்டு மக்கள் அமெரிக்காவில் குடியேறுவதைக் கட்டுப்படுத்த மிகவும் முனைப்புடன் இருந்து வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அவரைப் பொறுத்தவரை, அமெரிக்க நிறுவனங்கள் பணிக்காக வெளிநாடுகளில் இருந்து மக்களை அழைத்து வரக் கூடாது. அமெரிக்க மக்களுக்கே அந்த வாய்ப்புகளைத் அமெரிக்க நிறுவனங்கள் தர வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கேற்ற மாதிரியான பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். அப்படியான அதிரடி அறிவிப்பில் ஒன்று தான், நேற்று வெளியிடப்பட்டுள்ள H-1B விசா பற்றிய அறிவிப்பு. நாளை (செப்டம்பர் 21,…

பெருந்துறை தொழிற்பேட்டையால் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் என்ன பிரச்னை? பிபிசி தமிழ் கள ஆய்வு

கட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்20 செப்டெம்பர் 2025, 06:59 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர்பெருந்துறை சிப்காட் வளாகத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மாசுபட்டிருப்பதை உறுதி செய்யும் வகையில் ‘இந்த ஆழ்குழாய் கிணற்று நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல’ என்று அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. சிப்காட் வளாக ஆலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் பல ஆண்டுகளாக வெளியேற்றப்பட்ட கழிவுநீர்தான் இதற்குக் காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கு தீர்வு காணப் போராடி வரும் அமைப்பினர், சிப்காட் வளாக…

தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை: சென்னை, புதுச்சேரி உட்பட பல மாவட்டங்களில் மிதமான மழை|Tamilnadu weather forecast rain September 20 2025

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்துகொண்டு இருக்கிறது. தற்போது வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இன்று காலை 10 மணி வரை, தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை படி, நாளை வரை இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் காற்றுடன் கூடிய மழை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் பெய்யலாம்.இன்று ஓரளவு மேகமூட்டம்,…

UTI: சிறுநீர் பாதை தொற்று பெண்களுக்கு அதிகம் ஏற்படுவதற்கு காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், ரெபேக்கா தார்ன் பதவி, பிபிசி 19 செப்டெம்பர் 2025, 11:10 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது, ஆனால் சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கிறீர்களா? சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலாக இருக்கிறதா?இவை அனைத்தும் சிறுநீர் பாதை தொற்றின் (UTI) பொதுவான அறிகுறிகள். இந்தத் தொற்று ஏற்பட்டால், சிறுநீர் கழிப்பது மிகுந்த வேதனை அளிக்கலாம்.உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400 மில்லியன் மக்கள் சிறுநீர் பாதை…

Exclusive: 'அதிமுக தொண்டர்களை அரவணைக்கும் சரணாலயம்தான் அறிவாலயம்!'- திமுகவில் இணைந்த மருது அழகுராஜ்

அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடுகளின் முன்னாள் ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ் ஓ.பி.எஸ் அணியில் இருந்தார். ஆனால், சமீபமாக விஜய்க்கும் தவெக-வுக்கும் ஆதரவாக பல்வேறு கருத்துகளையும் பேசி வந்தார். அவர் தவெக-வில் இணைவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று(செப்.18) ஸ்டாலின் தலைமையில் திமுக-வில் இணைந்திருக்கிறார். திமுகவில் இணைந்த மருது அழகுராஜ்அதிமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைந்த அன்வர் ராஜா, மைத்ரேயன் வரிசையில் தற்போது மருது அழகுராஜூம் இடம் பிடித்திருக்கிறார். இந்நிலையில் சில கேள்விகளுடன் மருது அழகுராஜினைத் தொடர்புகொண்டு பேசினோம்.…

1 150 151 152 153 154 529