நாகப்பட்டினம் மாவட்டம் எட்டுக்குடி முருகன் கோயில் : தண்ணீர் பாலாக மாறிய அதிசயம் நிகழ்த தலம்!
இத்தலத்தில், ஆனந்தவள்ளி சமேத செளந்தரேஸ்வரர், தல விநாயகர், நவ வீரர்கள், கூத்தாடும் கணபதி, சுரத் தேவர், ஸ்ரீநிவாஸ செளந்தராஜப் பெருமாள், அனுமன், மனோன்மணி அம்மை, ஐயப்பன், மகாலட்சுமி, சனிபகவான், பைரவர், நவகிரகங்கள் ஆகியோரையும் தரிசிக்கலாம். இத்தலத்தைச் சுற்றியுள்ள 18 கிராம மக்களுக்கும் எட்டுக்குடி முருகனே குலதெய்வமாக விளங்குகிறார். மீனவக் கிராம மக்கள் இத்தலத்து முருகனையே பக்தி சிரத்தையுடன் வழிபடுகின்றனர். மீன்பிடித் தடைக்காலம் முடிந்து அவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும்முன், இங்கு வந்து முருகனை வழிபட்டு, சரவண…









