தமிழ்நாடு அரசு ஒதுக்கீட்டில் 461 எம்பிபிஎஸ் சீட் குறைகிறதா? புதிய சர்ச்சையின் பின்னணி
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறுவதால் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் 400-க்கும் மேற்பட்ட இளங்கலை மருத்துவ இடங்கள் பறிபோவதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.முந்தைய திமுக அரசால் தான் இந்தச் சூழ்நிலை உருவாகியிருப்பதாக தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் “அரசு இடங்கள் பறிபோகக் கூடாது என்பது தான் திமுக…









