Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: முகத்தில் கரும்புள்ளி, உடலெங்கும் அரிப்பு… தீர்வு என்ன?

Doctor Vikatan: எனக்கு முகம் மற்றும் கைகளில் கரும்புள்ளிகள் வருகின்றன. உடல் முழுவதும் அரிப்பும் இருக்கிறது. நீரிழிவுநோயும் இல்லை. இது என்ன பிரச்னை…. இதற்கு என்ன தீர்வு?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமாசருமநல மருத்துவர் பூர்ணிமாகேள்வியில் உங்கள் வயது, உங்கள் வேலையின் தன்மை, தினமும் சூரிய வெளிச்சத்தில் செலவிடும் நேரம், வேறு ஏதேனும் உடல்நல பிரச்னைகளுக்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறீர்களா என எந்தத் தகவலும் இல்லை. எனவே நீங்கள் குறிப்பிட்டுள்ள பொதுவான அறிகுறிகளை வைத்து இதற்கான…

இயற்கை தரும் பேரழகு !

பாரம்பரிய அழகு ரகசியங்களை முறையாகக் கடைப்பிடித்தால், உடலுக்கு நிரந்தர ஆரோக்கியமும் அழகும் சேரும் என்கிறார் இயற்கை மற்றும் சித்த மருத்துவர் மகேஷ்வரி. அவர் தரும் சில நேச்சுரல் டிப்ஸ் இங்கே…இயற்கை தரும் பேரழகு !1 கிருமிநாசினியாகும் வேப்பிலைஅழகுப் பொருட்களின் ராணி. பிசுபிசுப்பு, எண்ணெய் வழிதல், பரு, கரும்புள்ளிகள் போன்ற பிரச்னைகள் தீர, தினமும் வேப்பிலைத் தண்ணீரால் முகத்தைக் கழுவிவருவது நல்ல பலன் தரும். இதைத் தொடர்ந்து செய்துவந்தால், முகச் சுருக்கங்கள் நீங்்கி, இளமையான தோற்றத்தைத் தக்கவைக்கும். இது…

தாய்மையே அழகு!

‘தாய்ப்பால்’ மனிதர் உணரும் முதல் பசியின் உணவு. முதல் ருசியும் அதுதான். குழந்தை முதன்முதலில் தனக்கான ஒரு உறவைத் தேடி, உறுதி செய்வது தாய்ப்பாலை அருந்தும் போதுதான். பாதுகாப்பான உணர்வு, அரவணைப்பு, அன்பு, கருணை போன்ற பண்புகளையும், தாயின் கதகதப்பிலிருந்து குழந்தை உணரத் தொடங்கும். இயற்கையின் படைப்பாகச் சுரக்கும் தாய்ப்பாலில் சத்துக்களோடு, அன்பும் கலந்து ஊட்டப்படுகிறது. முதன்முறையாக ஒரு தாய் தன்னை முழுமையாக உணரும் தருணம், தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து குழந்தை பசியாறும் நிமிடம்தான். குழந்தை…

How To: நீரிழிவு நோய் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி? | How to diagnose the symptoms of diabetes?

சர்க்கரை நோய் என நாம் அழைக்கும் நீரிழிவு நோயை, முந்தைய காலத்தில் பணக்கார வியாதி என்று சொல்வார்கள். ஏனென்றால் பெரிய அளவில் உடல் உழைப்பில்லாத, வசதி படைத்தவர்கள்தான் அதிகளவில் நீரிழிவுக்கு ஆட்பட்டதால் அப்படியாகக் கூறப்பட்டது. ஆனால், இன்றைக்கு அந்த நிலை முற்றிலுமாக மாறி வயது வேறுபாடு, வர்க்க வேறுபாடின்றி யார் வேண்டுமானாலும் நீரிழிவுக்கு ஆளாகலாம் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. வருமுன் காப்பதே சிறந்தது என்கிற தாரக மந்திரம் அனைத்து நோய்களுக்கும் பொருந்தக்கூடியது. எந்த நோயாக இருந்தாலும் முடிந்தவரை…

Doctor Vikatan: மெதுவாக நடந்தாலும் முதியோர் அதிகம் சறுக்கி விழுவது ஏன்?

Doctor Vikatan: ஈரமான தரைகள் மற்றும் பாத்ரூம்களில் எல்லோரும் புழங்கினாலும் மெதுவாக நடக்கும் வயதானவர்களுக்கு அதிகம் சறுக்கி விடுவது ஏன்?Meenakshi Mohan, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்பொது மருத்துவர் அருணாசலம்ஈரம் எங்கிருந்தாலும் அந்தப் பகுதிகளில் பூஞ்சைத் தொற்று ஏற்படும். அது படிகிற இடங்களில் மென்மையான படலம் ஏற்பட்டு, கால்களை ஊன்றும்போது பிடிமானம் இல்லாமல் வழுக்கிவிடும். அதனால்தான் குளியலறை, கழிவறை போன்றவற்றை உபயோகித்து முடித்ததும் ஈரமில்லாமல் சுத்தமாக வைத்திருக்கப் பழக வேண்டும் என்பது…

தாய்ப்பாலே தடுப்பூசிதான்!

பெற்ற குழந்தைக்கு உற்ற மருந்தென்று தாய்ப்பால் மிஞ்சிடத் தரணியில் ஏதும் உண்டோ? தாய்க்கும் சிசுவுக்குமான தன்னிகரில்லா உறவுப் பிணைப்பான தாய்ப்பாலின் சிறப்புகளையும், மருத்துவப் பலன்களையும் விரிவாகப் பேசுகிறார், மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் பொன்னி.’தன் குழந்தை ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்பதுதான் எல்லாத் தாய்மார்களின் பிரார்த்தனையும். பெண் கருத்தரித்தவுடன், தாய்ப்பாலின் மகத்துவம் பற்றி அறிவுறுத்துவதுடன், ஒவ்வொரு மாதப் பரிசோதனையின்போதும், அதன் முக்கியத்துவத்தைப் புரியவைப்பது எங்கள் கடமை.தாய்ப்பாலே தடுப்பூசிதான்!சீம்பால் (Colostrum) மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத்தில், பிசுபிசுப்பாகச் சுரக்கும்…

#HavanaSyndrome: இந்தியாவில் பரவுகிறதா விநோத நோய்? விசாரணையில் இறங்கிய மத்திய அரசு!

விநோத நோயான ஹவானா சிண்ட்ரோம் இந்தியாவில் பரவுவதற்கான வாய்ப்புள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று, நீதிமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த அமர்நாத் சாகு என்பவர், பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், இந்தியாவில் ‘ஹவானா சிண்ட்ரோம்’ (Havana Syndrome) பரவியுள்ளதா என்று கண்டறிய வேண்டும். மேலும் இந்தியாவில் அது பரவுவதையும் தடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.கர்நாடக உயர் நீதிமன்றம்பெண்களை அதிகம் பாதிக்கும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்……

Doctor Vikatan: காரச்சுவையை அறவே தவிர்ப்பது ஆரோக்கியமானதா? | Doctor Vikatan: Is avoiding alkaline healthy?

Doctor Vikatan: இனிப்பு, உப்புச்சுவைகளை சிலர் தவிர்ப்பதுபோல, வயதானவர்கள் சிலர் காரச் சுவையையும் அடியோடு தவிர்த்து உண்கிறார்களே… அதனால் பாதிப்பு வராதா?- Meenakshi Mohan. விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமிஅரசு சித்த மருத்துவர் வரலட்சுமிதமிழர்களின் உணவிலும் சரி, சித்த மருத்துவத்திலும் சரி, அறுசுவை என்பது அடிப்படை தத்துவம். ஒரு மனிதனுக்கு நோய் வருவதும் வராததும் அடிப்படையான இந்த ஆறு சுவைகளின் அடிப்படையிலும் பஞ்சபூதங்களின் அடிப்படையிலும்தான் கணிக்கப்படும். எனவே ஒருவர் தனது…

தாயிலிருந்து குழந்தைக்கு பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ்; தீர்வு என்ன? | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 33 | Mother-to-child transmission of hepatitis B virus; What is the solution?

HBsAg பாசிடிவ் மற்றும் Anti-HBs நெகடிவ்வாக இருப்பின், குழந்தைக்கு ஹெபடைட்டிஸ் பி நோயுள்ளது உறுதிப்படுத்தப்படும். மாறாக, HBsAg நெகடிவ் மற்றும் Anti-HBs பாசிடிவ்வாக இருப்பின் ஆன்டிபாடியின் அளவை கண்டறிய வேண்டும்; Anti- HBs titre 10 mIU/ml மேல் இருந்தால் குழந்தைக்கு ஹெபடைட்டிஸ் பி நோய்த்தொற்று இல்லை மாறாக தடுப்பூசிகளால் சிறந்த அளவு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளதென அர்த்தம்; மாறாக, HBsAg நெகடிவ் மற்றும் Anti-HBs titre 10 mIU/ml கீழ் இருந்தால், ஹெபடைட்டிஸ்…

1 56 57 58 59 60 211