கலர் கலர் கவலைகள்! | Color Color Concerns!
நன்றி குங்குமம் டாக்டர் நிறக்குருடு தரும் தடுமாற்றம்!பிசாசு படத்தில் ஓர் ஆட்டோக்காரர் வருவார் நினைவுள்ளதா? சாலையில் சிவப்பு விளக்கு எரிவதைப் பார்க்க முடியாமல் சிக்னலில் நின்றுகொண்டிருக்கும் வாகனத்தின் மீது இடித்து நிறுத்துவார். அவருக்கு நிறக்குருடு பிரச்சனை இருக்கும். ஒரு கிளைப்பாத்திரத்தின் அந்தப் பிரச்சனைதான் படத்தின் கதையையே உருவாக்கும். நிறக்குருடு பிரச்சனை உள்ளவர்கள் செய்யும் அலம்பல்கள் நமக்குத்தான் வேடிக்கையாய் இருக்கும். அவர்களுக்கோ அது ஒரு சிக்கலான தடுமாற்றம். நிறக்குருடு பிரச்சனையால் போலிஸாவது, கப்பல் கேப்டனாவது, விமானஓட்டியாவது என்ற எதிர்காலக்…






