ஆரோக்கியம் தரும் ஆலமரம்… பற்களின் வலிமைக்கு உரம்… | மூலிகை ரகசியம் – 20 | banyan tree medicinal uses
பற்களின் நண்பன்`ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’ என்ற பழமொழியை பலமுறை கேள்விப்பட்டிருப்போம். இதில் ஆலுக்கு சொந்தக்காரர்தான் இந்த ஆலமரம். ஆலமர விழுதுகளைக் கொண்டு பல் துலக்கும் பழக்கம் அனேகருக்கு உண்டு. மென்மையான ஆலமர விழுதுகளைக் கொண்டு பல் துலக்க, பற்களுக்கு மிகுந்த பலம் கிடைக்கும்.கூடுதல் பலனாக நம் பல் ஈறுகளும் இறுக்கமைடையும். பற்களும் அவற்றைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் ஈறுகளும் இரட்டிப்பு மகிழ்ச்சி அடையும். இதன் விழுதுகளைக் காயவைத்து, பொசுக்கி, பற்பொடியாகவும் உபயோகப்படுத்தலாம்.…






