Doctor Vikatan: தினமும் ஷாம்பூ குளியல் எடுப்பது சரியா, தவறா? | Doctor vikatan – Is it right or wrong to take a shampoo bath every day
சிலருக்கு மண்டைப்பகுதி அதீதமாக வறண்டு காணப்படும். அதாவது முடியெல்லாம் உடைந்து உதிர்கிற அளவுக்கு வறண்டிருக்கும். அப்படிப்பட்டவர்கள் தலைக்கு நல்லெண்ணெயோ, தேங்காய் எண்ணெயோ, விளக்கெண்ணெயோ, ஆலிவ் எண்ணெயோ வைத்து மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து ஷாம்பூ குளியல் எடுக்கலாம்.இன்னும் சிலருக்கு மண்டைப்பகுதி எண்ணெய்ப்பசையுடன் இருக்கும். அவர்களுக்கு எண்ணெய் வைத்துக் குளிக்க வேண்டிய தேவை இருக்காது. அவர்களுடைய சருமம் செபேஷியஸ் சுரப்பிகளின் வழியே சீபம் என்ற எண்ணெயைச் சுரந்துகொண்டே இருக்கும். அதனால் அவர்களது தலையில் பிசுபிசுப்பு இருந்துகொண்டே இருக்கும்.…





