Doctor Vikatan: இளமைத் தோற்றத்தைத் திருப்பித் தருமா கொலாஜென் சப்ளிமென்ட்டுகள்? | Can collagen supplements restore youthful appearance?
கொலாஜென் உற்பத்தி சீராக இருந்தால்தான் சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும். மூட்டுகளில் வலி வராமல் இருக்கும். கொலாஜென் என்பது உணவின் மூலமும் கிடைக்கும். அப்படிக் கிடைக்கப் பெறாதவர்கள் சப்ளிமென்ட்டாகவும் எடுத்துக்கொள்ளலாம். மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து ஆலோசகரின் பரிந்துரையோடு தரமான கொலாஜென் சப்ளிமென்ட்டாக எடுத்துக்கொள்ளும்போது எந்தப் பக்க விளைவும் வராது.உணவு என்று பார்த்தால் அசைவத்தில்தான் கொலாஜென் பிரதானமாக இருக்கிறது. உதாரணத்துக்கு, ஆட்டுக்கால் சூப், சிக்கன் சூப் போன்றவற்றில் அது மிக அதிகம். அசைவத்தோடு ஒப்பிடும்போது சைவ உணவுகளில் கொலாஜென் குறைவாகவே இருப்பது உண்மைதான்.ஆட்டுக்கால்…









