ஹவாய் – பசிபிக் தீவு: இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்த முதல் குடும்பம் – பெரும் பணக்காரர்களானது எப்படி?
பட மூலாதாரம், Flickr/East-West Centerபடக்குறிப்பு, குலாப் வாடுமுல்லின் (இடது) தந்தை ஜமந்தாஸ் 1915இல் ஹொனலுலுவில் தனது குடும்ப வணிகத்தை ஒரே ஒரு கடையில் இருந்து தொடங்கினார்.கட்டுரை தகவல்கடந்த 1915-ஆம் ஆண்டில், 29 வயதான இந்திய தொழிலதிபர் ஜமந்தாஸ் வாடுமுல், தனது பங்குதாரர் தரம்தாஸுடன் இறக்குமதி தொழிலில் தனது சில்லறை விற்பனைக் கடையை அமைப்பதற்காக ஹவாயின் ஒஹாஹு தீவுக்கு சென்றார். இருவரும் ஹொனலுலு ஹோட்டல் தெருவில் வாடுமுல் & தரம்தாஸ் என்ற பெயரில் தொழிலை தொடங்கினர். அவர்கள் கிழக்கில்…