சென்னை: சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து இன்னும் முடிவு எடுக்காமல் இருப்பதால் கரும்பு விவசாயிகளின் நிலை மிகவும் கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே தமிழக அரசு இந்த பொங்கல் பரிசு தொகுப்பில், கரும்பு வழங்குவதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடம் அளிக்காமல் விவசாயிகளிடமிருந்து உடனடியாக கரும்பு கொள்முதலை ஆரம்பிக்க வேண்டும். தமிழக அரசு கடந்த ஆண்டு போல மளிகை பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்புக்கு பதிலாக ரொக்கமாக பணம் கொடுத்துவிடலாம். ஆனால் அதே சமயம் நம் நெசவாளர்கள் மற்றும் கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு விலையில்லா வேட்டி, சேலை மற்றும் கரும்பு ஆகியவற்றையும் பொங்கலுக்கு கண்டிப்பாக ரொக்கத்துடன் சேர்த்து வழங்கிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சசிகலா வேண்டுகோள் பொங்கல் பரிசு தொகுப்புடன் விலையில்லா வேட்டி சேலை, கரும்பு
Share