என்ஜிஏ அடோய்பா தோங்பா (NGA ATOIBA THONGBA): வட கிழக்கு இந்தியாவில் மிகவும் பிரபலமான கிறிஸ்துமஸ் பண்டிகைக்கால உணவு என்றால் இது தான். இந்த நாளில் மணிப்பூரி மக்கள் கோழிக்கறியைத் தவிர மீன்கள் மற்றும் காய்கறிகள் கொண்டு செய்யப்படும் என்ஜிஏ அடோய்பா தோங்பா வை சமைக்கின்றனர். மீனுடன் காய்கறிகள் மற்றும் மசாலாக்கள் சேரும் போது நமக்கு கூடுதல் சுவையைத் தரும் உணவுகளில் ஒன்றாக உள்ளது.
செய்முறை: இதை செய்வதற்கு முதலில் முள் இல்லாமல் மீன்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். இதனுடன் மிளகு, மசால், மிளகாய்த்தூள் சேர்த்து பிசைந்துக் கொள்ள வேண்டும். இதனையடுத்து ஒரு பவுலில் மிளகாய் தூள், மஞ்சள், சீரகத்தூள் போன்றவற்றைக் கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், பட்டை, இஞ்சி மற்றும் பூண்டு விழுதைச் சேர்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்து மீன்களை உள்ளே போட்டு வதக்க வேண்டும். ஒரு 5 நிமிடத்திற்கு பிறகு மசாலா கலவையைச் சேர்க்க வேண்டும். இதனையத்தொடர்ந்து உருளைக்கிழங்கு, பட்டாணி போன்ற காய்கறிகளைச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்தால் போதும். சுவையான என்ஜிஏ அடோய்பா தோங்பா ரெடியாகிவிடும். இந்த டிஸ் வழக்கமான அசைவ உணவுகள் போல் இல்லாமல் தனித்துவமான சுவையுடன் இருக்கும்.
கிறிஸ்துமஸ் வந்தாலே இந்த உணவுகள்தான் கண்டிப்பாக இடம் பெறும்… ஸ்பெஷல் ரெசிபீஸ் லிஸ்ட்..!
Share