நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே புத்தூர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், பாஜ இல்லாத ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் ஒன்றிய அரசு தங்களுக்கு சாதகமாக செயல்படும் ஆளுநர்களை நியமித்து இடையூறுகளை ஏற்படுத்தி போட்டி அரசை நடத்துகின்றனர். இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள ஆளுநர் ஆர்என்.ரவி போட்டி அரசாங்கம் நடத்தவில்லை. மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக பேசுகிறார். இந்தியா இந்து மதத்தை சார்ந்த அரசு என பேசுகிறார். இவ்வாறு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசும் ஆளுநரை ஒன்றிய அரசு திரும்ப பெற கோரி வரும் 29ம் தேதி ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படவுள்ளது, என்றார்.
மதசார்பின்மைக்கு எதிராக பேசுகிறார் ஆளுநர்: முத்தரசன் குற்றச்சாட்டு
Share