இப்படி எடை மோசடி, லஞ்ச மோசடி முறைகேடுகளை களைந்திட அனைத்து நெல் கொள்முதல் நிலையங்கள், திறந்த வெளி கிட்டங்கிகள், முதுநிலை மண்டல மேலாளர்கள் அலுவலகங்களில் CCTV கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்திட வேண்டுமென கடந்த 7ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். உருப்படியான நடவடிக்கையே இல்லை. ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உளுந்து 100 கி.கி, எள் 80 கி.கி, நிலக்கடலை 80 கி.கி, பயிறு 100 கி.கி, நெல் 75 கி.கி, பருத்தி 100 கி.கி, துவரை 100 கி.கி, கம்பு 100 கி.கி, கேழ்வரகு 100 கி.கி, மக்காச்சோளம் 100 கி.கி, கொள்ளு 100 கி.கி, சூரியகாந்தி 80 கி.கி, வெல்லம் 75 கி.கி, தேங்காய் 80 கி.கி மூட்டைகளில் எடையிடப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வரும் நடைமுறை உள்ளது.
சர்க்கரை ஆலைகள், சிமெண்ட் ஆலைகள், உர ஆலைகள், தீவன ஆலைகள், தவிடு ஆலைகள் அனைத்தும் 50 கி.கி மூட்டைகளைப் பயன்படுத்தி வரும் வேளையில், நெல் கொள்முதல் நிலையங்களில் மட்டும் 40 கி.கி மூட்டை பயன்பாடு ஏன்? எனவே, நெல் கொள்முதல் நிலையங்களிலும் 80 கி.கி மூட்டைகளே பயன்படுத்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு ஊராட்சியிலும் அரசின் களம், புறம்போக்குகள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதனை மீட்டெடுத்து அதில் நிரந்தர கொள்முதல் நிலையங்கள் புதிதாகக் கட்ட வேண்டும்” என்றார்.