Doctor Vikatan: முறை தவறும் மாதவிடாய் சுழற்சி…. 50 வயது வரை மாதவிடாய் வருவதுதான் சரியானதா? – Doctor vikatan – Irregular Menstrual Cycle – Is it right to have periods till the age of 50?

Share

அதாவது, உயர வேண்டிய நேரத்தில் அப்படி அதிகரிக்காமல் குறைந்து, குறைய வேண்டிய நேரத்தில் அதிகரித்து என அதன் சுரப்பு தாறுமாறாக இருக்கும். இதன் காரணமாக ஒருவரின் மாதவிலக்கு நாள்கள் நீளலாம் அல்லது குறையலாம். இன்னும் சிலருக்கு மாதவிலக்கு சுழற்சி நார்மலாக இருக்கும். ஆனால், அந்த நாள்களில் அவர்களுக்கு சினைப்பையிலிருந்து முட்டைகள் வெளிவராது. இத்தகைய மாற்றமானது டீன்ஏஜின் இறுதியிலும், இனப்பெருக்க வயதின் இறுதியிலும் நடக்கும் இயல்பான விஷயம்.

உடல் சூடாவது, தூக்கமின்மை, வெஜைனா பகுதியில் வறட்சி போன்றவை மெனோபாஸுக்கான அறிகுறிகள், பெரிமெனோபாஸ் காலத்திலேயே சிலருக்கு ஆரம்பிக்கும். 12 மாதங்களுக்கு தொடர்ந்து பீரியட்ஸே வரவில்லை என்றால் ஒரு பெண் மெனோபாஸை அடைந்துவிட்டார் என எடுத்துக்கொள்ளலாம்.

முறைதவறிய மாதவிலக்கானது 7 நாள்கள் இடைவெளியில் வந்தால் நீங்கள் பெரிமெனோபாஸின் ஆரம்பநிலையில் இருக்கிறீர்கள் என எடுத்துக்கொள்ளலாம். அதுவே அந்த இடைவெளியானது 60 நாள்கள் என நீடித்தால் நீங்கள் மெனோபாஸ் நிலையில் இருக்கிறீர்கள் என எடுத்துக் கொள்ளலாம். மெனோபாஸுக்கான அறிகுறிகளுடன் தாம்பத்திய உறவில் நாட்டமின்மை, எலும்புத் தேய்மானம் போன்றவையும் வரலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com