சென்னை: நரிக்குறவர்களை எஸ்டி பட்டியலில் சேர்க்கும் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றிய பிரதமர் மோடிக்கு, ஜி.கே.வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேறியது. நீண்டகால கோரிக்கையை ஏற்று, நிறைவேற்றிய பிரதமர் மோடிக்கு தமாகா சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு சட்ட ரீதியாக உரிய அங்கீகாரம் சலுகைகள் கிடைத்த போதிலும், அவற்றை தாமதம் இல்லாமல் உடனடியாக முழுமையாக நடைமுறைப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எஸ்டி பட்டியலில் நரிக்குறவர்கள் பிரதமர் மோடிக்கு ஜி.கே.வாசன் பாராட்டு
Share
