சென்னை: தமிழக பாஜ துணை தலைவர் கரு.நாகராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழக பாஜ கட்சி நடத்தும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா வரும் 18ம்தேதி மாலை 6 மணி அளவில் சென்னை கீழ்ப்பாக்கம் செயின்ட் ஜார்ஜ் அரங்கத்தில் நடைபெற உள்ளது. விழாவுக்கு, மாநில தலைவர் அண்ணாமலை தலைமை ஏற்று மாணவர்களுக்கு ஊக்க பரிசுகளை வழங்குகிறார். தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் ஷேக் தாவூத், நாகூர் தர்கா ஷாகிப் காதிரி, டக்டர் நாகூர் கலிபா, கேப்கான் இந்திய ஒருங்கிணைப்பாளர் பாஸ்டர் ஜெய்சிங், ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்த இருக்கிறார்கள். கட்சியின் மாநில துணை தலைவர்கள், மாநில செயலாளர்கள், சிறுபான்மை அணி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். அனைத்து மதங்களையும் சார்ந்த 500 மாணவர்களுக்கு தலா ரூ.5000 வீதம் ஊக்க உதவித் தொகை வழங்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரியின் பேத்தி தேவன்யா குழுவினரின் கதக் நடன நிகழ்ச்சியும், பிரபல பரதநாட்டிய கலைஞர் மணி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தமிழக பாஜ கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி தங்கையா, துணை தலைவர் ஜான்சன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
பாஜ சார்பில் வரும் 18ம்தேதி சென்னையில் கிறிஸ்துமஸ் பெரு விழா: தலைவர் அண்ணாமலை பங்கேற்பு
Share