சென்னை: விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு, மதிமுக தலைமைச் செயலாளர் துரை வைகோ நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, திமுக இளைஞர் அணிச் செயலாளர் அன்பு சகோதரர் உதயநிதி ஸ்டாலினை இன்று காலை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து அவருடைய பணிகள் சிறக்க வாழ்த்து தெரிவித்தேன்.இந்நிகழ்வில், கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, தி.மு.இராசேந்திரன், கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியதேவன், சட்டமன்ற உறுப்பினர்கள் புதூர் மு.பூமிநாதன், அரியலூர் கு.சின்னப்பா, மருத்துவர் சதன் திருமலைக்குமார், மருத்துவர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன், மாவட்டச் செயலாளர்கள் கே.கழககுமார், டி.சி.இராசேந்திரன், சைதை பி.சுப்பிரமணி, ஊனை பார்த்திபன், பூவை மு.பாபு, ஆவடி இரா.அந்திரிதாஸ், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் சிக்கந்தர், மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் கனல் காசிநாதன், எழும்பூர் பகுதி செயலாளர் தென்றல் நிசார் ஆகியோர் உடனிருந்தார்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, துரை வைகோ நேரில் வாழ்த்து..!
Share
