நேரு பற்றி அமித் ஷா இந்திய நாடாளுமன்றத்தில் பேசியது என்ன?

Share

நேரு

பட மூலாதாரம், Getty Images

அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டரில் உள்ள யாங்ட்சே பகுதியில் டிசம்பர் 9ஆம் தேதி சீன ராணுவ வீரர்களுக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் நடந்து இரண்டு நாட்கள் ஆன பிறகும் அரசு மௌனமாக இருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் ஆக்ரோஷமாக உள்ளன.



இரண்டு நாட்களாக அரசு மெளனம் காத்தது ஏன் என முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.



பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அரசின் தரப்பை விளக்கினார். அதே நேரத்தில் இந்த முழு விஷயத்திலும் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா சில கேள்விகளை எழுப்பினார்.



காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது கடைப்பிடித்த சீனா தொடர்பான கொள்கை குறித்து அமித் ஷா கேள்விகளை எழுப்பினார். இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவாஹர் லால் நேருவையும் அவர் விட்டு வைக்கவில்லை.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com