சிவகாசி அருகே கீழத்திருத்தங்கல் சிவகாந்தி நகரைச் சேர்ந்தவர் பிரிதிவிராஜ் (வயது 30). இவர் தனக்குச் சொந்தமான நிலத்தின் பட்டா மாறுதலுக்காக சிவகாசி தாலுகா அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 1-ம் தேதி மனு அளித்திருக்கிறார். இந்தமனு, கள விசாரணைக்காக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் உமாவதிக்கு (48) அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அதன்பேரில் கிராம நிர்வாக அதிகாரி உமாவதி, தலையாரி பொன்ராஜுடன் சேர்ந்து பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்திருந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்திருக்கிறார். இதன்பின்னர், பிரிதிவிராஜை அழைத்துப் பேசிய அவர்கள், பட்டா மாறுதல் செய்து தரவேண்டுமென்றால் ரூ.10ஆயிரம் லஞ்சம் தரவேண்டுமென கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை எனத் தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து பேரம் நடத்தப்பட்டு இறுதியாக ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தந்தால் நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்து தருவதாக கிராம நிர்வாக அதிகாரி உமாவதியும், தலையாரி பொன்ராஜூம் தெரிவித்திருக்கின்றனர். இதனால் வேறு வழியின்றி பிரிதிவிராஜூம் லஞ்சம் தர ஒப்புக்கொண்டுள்ளார்.
சிவகாசி: பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்… கிராம நிர்வாக அதிகாரி, தலையாரி கைது! | Sivakasi union village administrative officer arrested on bribe complaint
Share