முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிதாக அணை கட்ட கேரளா முயற்சி ராமதாஸ் கண்டனம்

Share

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முல்லைப் பெரியாற்றின் குறுக்கே இப்போதுள்ள அணைக்கு கீழே புதிய அணை கட்டுவதால் சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது; அதனால், திட்டமிட்ட இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான பணிகளை கேரள அரசு தொடங்க வேண்டும் என்று அம்மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள வல்லுனர் குழு பரிந்துரைத்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. வல்லுனர் குழுவின் பரிந்துரையை ஏற்று அதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணிகளை கேரள அரசு தொடங்கியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்கப் பகுதிகளில் ஏராளமான சொகுசு விடுதிகளும், கேரள பிரபலங்களின் மாளிகைகளும் கட்டப்பட்டுள்ளன. அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டால் அவை நீரில் மூழ்கி விடும். அவற்றை காக்கவே அணையின் நீர்மட்டத்தை உயர்த்த விடாமல் தடுக்கும் நோக்கத்துடன் புதிய அணை கட்டப்பட வேண்டும் என்ற முழக்கத்தை கேரள அரசு எழுப்பி  உள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com