குஜராத் தேர்தல்: இந்துக்களின் வாக்குகளை கவர்ந்து எம்எல்ஏ ஆன முஸ்லிம் – யார் இவர்?

Share

இம்ரான் கேடாவாலா

பட மூலாதாரம், @IMRAN_KHEDAWALA

நடந்து முடிந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முஸ்லிம் சமுகத்தைச் சேர்ந்த ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.



குஜராத்தின் ஒரே முஸ்லிம் எம்எல்ஏ இம்ரான் கேடாவாலா, ஆமதாபாத்தின் ஜமால்பூர் கடியா தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து இரண்டாவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஒரு காலத்தில் இந்த தொகுதி ‘பாஜகவின் கோட்டை’ எனக் கருதப்பட்டது.

ஆனால் இம்ரான் கேடாவாலா கடந்த இரண்டு தேர்தல்களிலும் இங்கிருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தொகுதி மறு வரையறைக்குப் பிறகும், ‘பாஜகவின் கோட்டை’ என்று கருதப்பட்ட இந்த சட்டப்பேரவைத் தொகுதியை 2012 ஆம் ஆண்டும் பாஜக வென்றது, ஆனால் 2017 முதல் காங்கிரஸ் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று வருகிறது.



தொகுதி மறு வரையறைக்குப் பிறகு, ஜமால்பூர்-கடியாவில் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் முஸ்லிம் வேட்பாளர் சுயேச்சையாக நின்றதால் பாஜகவின் பூஷண் பட் வெற்றி பெற்றார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com