Doctor Vikatan: சுமார் 50 வயதுடைய, உடல் உழைப்பு ஏதும் இல்லாத ஆண்கள் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் எவ்வளவு தூரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்? எந்த நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்?
-Inc, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்
50 வயது ஆண், இதுவரை உடலியக்கமே இல்லை என்ற நிலையில், அந்த நபர் முதலில் அவரது உடல்நிலையில் ஏதேனும் பிரச்னைகள் இருக்கின்றனவா என்பதை டெஸ்ட் செய்து பார்க்க வேண்டியது அவசியம். அப்படி பிரச்னை ஏதும் இல்லை என்பது உறுதியானால், ஃபிட்னெஸ் ஆலோசகரின் வழிகாட்டுதலோடு அவருக்கான உடற்பயிற்சிகளைத் தெரிந்து கொண்டு செய்யத் தொடங்குவதுதான் சரி.