சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு கண்டித்து அதிமுக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விருதுநகர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய இருப்பதால் இந்த மாவட்டங்களுக்கு மட்டும் 13ம் தேதி(இன்று) நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, அதற்கு பதிலாக வருகிற 21ம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறும். அனைத்து ஒன்றியங்களிலும் 14ம் தேதி அன்றும்; ஒத்திவைக்கப்பட்ட பேரூராட்சிகளில் 16ம் தேதி அன்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
அதிமுக அறிவிப்பு 15 மாவட்டங்களில் நடக்க இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
Share