“முதல்வர் அடாவடியாகச் செயல்படாமல், விவசாயிகளின் கருத்துகளைக் கேட்க வேண்டும்!” – டிடிவி.தினகரன்

Share

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு, கண்டியூர் அருகே நடவு செய்யபட்ட வயலில் நெல் உள்ளிட்ட பயிர்களை அழித்து திருவையாறு புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து சாலை பணி தற்காலிகமாக நிறுத்தபட்டது. பின்னர் ஆர்.சி.ஓ தலைமையில் விவசாயிகளிடம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

டிடிவி தினகரன்

`அறுவடை முடியும் வரை சாலை பணிகள் நடைபெறாது. அதன் பிறகு நிச்சயம் சாலை அமைக்கபடும்’ என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் மீண்டும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மூன்றாவது நாளாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் விவசாயிகளை நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

திருவையாறில் விவசாயிகளை சந்தித்த தினகரன்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வரும் வயல்களில் திருவையாறு புறவழிச்சாலை திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. விவசாயிகளிடம் அரசு எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தாமல் தன்னிச்சையாகப் புறவழிச்சாலையை அமைக்கிறது.

மாற்றுப் பாதையில் புறவழிச்சாலை அமைக்கலாம். இந்நிலையில், இப்போது செயல்படுத்தப்படும் புறவழிச்சாலை திட்டம், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கின்ற வகையில் உள்ளது. தற்போது, ஆற்றில் தண்ணீர் செல்வதால், பாலமும் கட்ட முடியாது. இந்தச் சூழ்நிலையில் அவசர, அவசரமாக இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய அவசியம் என்ன?

டிடிவி.தினகரன்

இங்கு நிலம் வைத்துள்ள விவசாயிகளை அழைத்துப் பேசி, இத்திட்டத்தைச் சரியான முறையில் செயல்படுத்த வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை. எனவே, அவர்களுடைய கருத்துகளைக் கேட்டறிய வேண்டும். அதுவரை இந்தச் சாலை போடுவதை நிறுத்த வேண்டும்.

மக்கள்தொகை பெருக்கம், சாலையில் நெரிசல் போன்ற காரணங்களால் தஞ்சாவூர்- திருவையாறு புறவழிச்சாலை தேவைதான் என்றாலும், அரசு கவனமுடன் இதனை கையாள வேண்டும். மேலும், விவசாயிகள், இப்பகுதி மக்களின் ஆதரவுடனுடம், அனுமதியிடனும், உரிய இழப்பீடு வழங்கிச் செயல்படுத்த வேண்டும்.

போராட்டத்தில் விவசாயிகள்

`இப்பகுதிக்கான பொறுப்பு அமைச்சர் போராட்டம் நடைபெறும் வழியாகச் சென்றார். ஆனால் எங்களை கண்டு கொள்ளவில்லை’ என விவசாயிகள் வேதனையுடன் கூறுகிறார்கள். திருவையாறு தொகுதியிலும் மக்களிடம் வாக்கு பெற்றுதான் ஆட்சிக்கு வந்துள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி போல் அதை மறந்துவிட்டு ஏனோ தானோவென அடாவடியாக செயல்படுவதை நிறுத்திவிட்டு விவசாயிகளின் கருத்துகளை கேட்டு செயல்பட வேண்டும். விவசாயிகளின் கோரிக்கையும் அதுதான்” என்றார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com