மதுரை: மதுரை மாவட்டம், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் உபகோயிலான அழகர்மலை, அருள்மிகு இராக்காயி அம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழாவில் இன்று (11.12.2022) நடைபெற்றது. இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஏ.வெங்கடேசன், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் இரா. கண்ணன், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மதுரை கள்ளழகர் திருக்கோயிலின் உபகோயிலான அழகர்மலை, இராக்காயி அம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழா
Share