இமாச்சலப்பிரதேச மாநில முதலமைச்சராக பதவியேற்றார் சுக்விந்தர் சிங் சுகு: மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியகா காந்தி ஆகியோர் பங்கேற்பு

Share

சிம்லா: இமாச்சலப்பிரதேச மாநில முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றார். சுக்விந்தர் சிங்குக்கு இமாச்சலபிரதேச ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அண்மையில் நடந்த இமாச்சல் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 40 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. சுக்விந்தர் சிங் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியகா காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.  

கடந்த மாதம் 12-ந் தேதி ஒரே கட்டமாக இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியதையடுத்து இமாச்சல பிரதேசத்தின் முதல்வராக சுக்விந்தர் சிங் சுகுவையும், துணை முதல்வர் பதவிக்கு முகேஷ் அக்னிஹோத்ரியையும் காங்கிரஸ் தலைமை அறிவித்தது.

இந்நிலையில் இன்று இமாச்சல பிரதேசத்தின் முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றார்.  ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com