வகுப்பறையில் கூச்சலிட்ட மாணவர்களை கடுமையாக தாக்கிய ஆசிரியர்.

Share

வகுப்பறையில் கூச்சலிட்ட மாணவர்களை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கைவைத்துள்ளனர்.

புதுச்சேரி, வில்லியனூர் அருகே உள்ள மணக்குப்பம் பகுதியில் அரசு தொடக்க பள்ளி இயங்கி வருகிறது. இங்கு நடுக்குப்பம், நல்லாத்தூர், மேலக்குப்பம், ராசாப்பாளையம், சங்கரன்பேட்டை, ஏம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.

பள்ளியில் ஒரு தலைமையாசிரியர் உட்பட 5 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளி அருணாச்சலம் என்பவரின் மகள் பிரீத்திகா அப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.

அங்கு பணிபுரியும் ஆசிரியர் பாரதிதாசன் என்பவர் மாணவர்கள் வகுப்பறையில் கூச்சலிட்டதாக கூறி மாணவர்களை மேஜையின் மேல் ஏறி நிற்க வைத்துள்ளார். மேலும் முட்டிப்போட வைத்து சராமரியாக தாக்கியுள்ளார். அப்போது மாணவ, மாணவிகள் கத்தி கதறி அழுதுள்ளனர். இருப்பினும் தகாத வார்த்தைகளை கூறி கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் பிரீத்திகா, கோகுல், புவன், நிக்கிஷ், சஞ்சனா, இரண்யா உள்ளிட்ட 10 மாணவர்களுக்கு கை, கால், முதுகு போன்ற இடங்களில் ரத்தம் கட்டு ஏற்பட்டுள்ளது. இரண்யா என்ற மாணவி பள்ளிக்கு செல்ல பயந்துக்கொண்டு கடந்த மூன்று நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை. இதுகுறித்து பெற்றோர்கள் சென்று ஆசிரியரிடம் கேட்டதற்கு வகுப்பறையில் கத்தினால் அப்படிதான் அடிப்பேன் வேண்டுமென்றால் உங்கள் பிள்ளைகளை பள்ளியில் இருந்து நிறுத்திக்கொள்ளுங்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் அப்பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் நிக்கிஷ் என்ற மாணவனை தடியால் கடுமையாக தாக்கியதில் மாணவனின் வலது கையின் முட்டிப்பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் பெற்றோர்கள் மாணவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். இது குறித்து குமார் ஆசிரியர் பாரதிதாசனிடம் சென்று கேட்டபோது, “நான் அப்படி தான் அடிப்பேன் வேண்டுமென்றால் மாற்று சான்றிதழ் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கூறியதால் இருவருக்கும் வாய்தகறாறு ஏற்பட்டது.

பிறகு குமார் ஆசிரியர் மீது மங்கலம் காவல் நிலைத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் விசாரணை செய்த போது ஆசிரியர் இனிமேல் இதுபோன்ற செயல் நடக்காது என்று உறுதியளித்ததின்பேரில்  போலீசார் வழக்கு ஏதும் பதியாமல் விட்டுவிட்டனர்.

ஆனால் தற்போது மீண்டும் மாணவர்களை கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதி பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு பயந்து வருகின்றனர். பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளின் நலன் கருதி மாற்று பள்ளியில் சேர்க்க திட்டமிட்டு மாற்று சான்றிதழ் கேட்டு வருகின்றனர்.

Also read… தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வரும் 2ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

தற்போது தனியார் பள்ளிகள் அதிகரித்து வரும் நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருகிறது. ஏழை எளிய மக்கள் தங்கள் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தான் மாணவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர். இதனால் மாணவர்களின் படிப்பு கேள்விகுறியாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஒரு ஆசிரியர் மாணவர்களை இதுபோன்ற அடித்து துன்புறுத்தியுள்ளதால் மாணவர்களின் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே கல்விதுறை அமைச்சர், செயலர், இயக்குநர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் இந்த ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com