Doctor Vikatan: கர்ப்பப்பை நீக்க அறுவைசிகிச்சைக்குப் பிறகு குறையும் தாம்பத்திய ஆர்வம் தீர்வு என்ன? -The effect of hysterectomy on women’s sexual

Share

இந்த அறுவைசிகிச்சைக்கு முன் உங்களது தாம்பத்திய ஆர்வம் எப்படியிருந்தது, உங்கள் கணவருடனான உறவு எப்படியிருந்தது, உங்கள் உடல் குறித்து உங்களுக்கு நெகட்டிவ் எண்ணங்கள் இருந்தனவா, மன அழுத்தம் இருந்ததா என்ற தகவல்கள் வேண்டும். இந்தப் பிரச்னைகள் இருந்திருந்தால் அறுவைசிகிச்சைக்குப் பிறகு இவையெல்லாம் தீவிரமாக வாய்ப்புகள் அதிகம்.

ஃபைப்ராய்டு உள்ளிட்ட பாதிப்புகளால் முன்பே செக்ஸ் உறவில் அசௌகர்யத்தை உணர்ந்தவர்களுக்கு, ஹிஸ்ட்ரக்டமிக்குப் பிறகு ஆர்வம் அதிகரிப்பதாகவே பலரும் சொல்கிறார்கள். ரேடிகல் ஹிஸ்ட்ரக்டெமி என ஒன்று உண்டு. புற்றுநோய்க்காகச் செய்யப்படுகிற இதில் கர்ப்பப்பை, சினைப்பைகள் கூடவே அருகிலுள்ள சில திசுக்கள் எல்லாம் அகற்றப்படும். இதில் நரம்புகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். அதன் காரணமாகவும் தாம்பத்திய உறவில் ஈடுபாடின்மை ஏற்படலாம்.

சினைப்பைகளையும் சேர்த்து அகற்றியிருந்தால் ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி எடுத்துக்கொள்ளலாம். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை ரீப்ளேஸ் செய்ய கிரீம் அல்லது ஜெல் உபயோகிக்கலாம் அல்லது டெஸ்டோஸ்டீரான் பேட்ச்சஸ் பயன்படுத்தலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com