சிறந்த ஆரோக்கியத்தை பெற விரும்பும் ஆண்கள் இறைச்சி உணவுகளுக்கு பதிலாக காய்கறிகள், முழு தானியங்கள், பழங்கள் என தங்கள் டயட்டை மாற்றுவது குடல் சார்ந்த கேன்சர் அபாயங்களை பாதிக்கும் மேல் எளிதாக குறைக்கலாம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர். இந்த புதிய ஆய்வின்படி தென் கொரியாவை சேர்ந்த கியுங் ஹீ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், நட்ஸ்கள் மற்றும் பருப்பு வகைகளை அதிகம் டயட்டில் சேர்த்து கொள்ளும் ஆண்களுக்கு குடல் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு சுமார் 22% குறைவாக இருப்பதை கண்டறிந்தது உள்ளனர்.
இந்த உணவுகளை சாப்பிட்டால் ஆண்களுக்கு கேன்சர் அபாயம் 22% வரை குறையும் : ஆய்வில் வெளியான தகவல்
Share