மக்களவை தேர்தலில் அகிலேஷ் போட்டி – Dinakaran

Share

கன்னுஜ்: 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் கன்னுஜ் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் சூசகமாக தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் கன்னுஜ்ஜில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார். அப்போது, மெயின்புரியில் அகிலேஷ் போட்டியிடாது குறித்தும்  அவரது மனைவியை போட்டியிட செய்வது குறித்தும் நிருபர்கள்  கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த கிலேஷ் யாதவ், ‘2024ம் ஆண்டு தேர்தல் திரும்ப நடைபெறும். தேர்தலில் போட்டியிடுவது நமது பணியாகும். சும்மா இருந்து என்ன செய்வேன். முதல் தேர்தலில் எங்கு போட்டியிட்டேனோ அதே தொகுதியில் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் போட்டியிடுவேன். சரியான நேரத்தில் இது குறித்து கட்சி முடிவு செய்யும்’ என்றார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com