பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்: ஓபிஎஸ் கோரிக்கை

Share

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டியதன் அவசியம் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 28-6-2018 அன்று திமுக சார்பில் வெட்டுத் தீர்மானம் அளிக்கப்பட்டு இருக்கிறது. ஜி எஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வந்தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.30 வரை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, முதல்வர் ஒன்றிய நிதி அமைச்சருடனும், மற்ற மாநில முதலமைச்சர்களுடனும் கலந்து பேசி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்து அனைத்து தரப்பு மக்களின் நலனை காக்க வேண்டும் என்று அதிமுக சார்பிலும், பொதுமக்களின் சார்பிலும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com