சென்னையில் போலீஸ் டிஜிபி காருக்கு அபராதம் விதித்த டிராஃபிக் போலீஸ் – வைரலாகும் படங்களும் கேள்விகளும்

Share

போக்குவரத்து விதிமீறல்

பட மூலாதாரம், rk_arvind99

சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலையின் எதிர்புறத்தில் போலீஸ் கூடுதல் தலைமை இயக்குநர் இருந்த அலுவல்பூர்வ காரை படம் பிடித்து ட்விட்டரில் நெட்டிசன் ஒருவர் பகிர்ந்த படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

அதற்கு காரணம், அந்த ட்விட்டர் பயனர் அந்த படங்களை தமது பக்கத்தில் பகிர்ந்தபோது தமிழ்நாடு காவல்துறை சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் ட்விட்டர் பக்கங்களையும் டேக் செய்ததுதான்.

சமூக ஊடகங்களில் இதுபோல ஆதாரத்துடன் படங்கள் பகிரப்பட்டால், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர் அல்லது வாகன ஓட்டி மீது நடவடிக்கை எடுத்து, அந்த விவரத்தை தமிழ்நாடு காவல்துறையும் போக்குவரத்து காவல்துறையும் தங்களுடைய பக்கத்தில் பகிரும் வழக்கத்தைக் கொண்டுள்ளன.


தற்போதைய விவகாரத்தில், சம்பவ நாளான நவம்பர் 13ஆம் தேதி சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் இருந்த கிழக்கு கடற்கரை சாலையில் போக்கும் பாதைக்கு எதிர்புறத்தில் தமிழ்நாடு காவல்துறையில் கூடுதல் டிஜிபி ஆக உள்ள பெண் உயரதிகாரியின் அலுவல்பூர்வ கார் சென்றுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com