விக்ரம் எஸ்: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் – என்னென்ன சிறப்புகள்?

Share

விக்ரம் எஸ்

பட மூலாதாரம், Skyroot

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம் எஸ்’ நவம்பர் 18ஆம் தேதி ஏவப்பட உள்ளது. இந்த ராக்கெட்டை ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட தனியார் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான ஸ்கைரூட் தயாரித்துள்ளது. ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் ஏவுதளமான சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விக்ரம் எஸ் ஏவப்படும்.

இந்தியாவின் விண்வெளித் துறையில் தனியார் ராக்கெட் நிறுவனங்களின் பிரவேசத்தை குறிப்பதாக இந்த நிகழ்வு அமையவிருக்கிறது.

‘விக்ரம்’ எஸ் என்றால் என்ன?

விக்ரம் எஸ் என்ற பெயர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) நிறுவனர் டாக்டர் விக்ரம் சாராபாயின் நினைவாக வைக்கப்பட்டிருக்கிறது.

விக்ரம் ராக்கெட் ஏவும் சீரிஸில் மூன்று வகையான ராக்கெட்டுகள் உள்ளன. அவை சிறிய அளவிலான செயற்கைக்கோள்களை வழங்குவதற்காக மேம்படுத்தப்படுகின்றன.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com