பக்கவாதத்தின் அறிகுறிகள்?
* பக்கவாதம் ஏற்படும்போது வாய் கோணல் ஆகலாம் அல்லது பேசும்போது குழறல் ஏற்படலாம் அல்லது பேச்சு தடைப்படலாம்.
* ஒருபக்க கை அல்லது காலில் பலம் குறையலாம்.
* நடக்கவே முடியாத அளவுக்குத் தடுமாறி விழுவது.
* பார்வை மங்கலாம்.
முதலுதவி நேரம் முக்கியமானது!
* பக்கவாதத்துக்கான சிகிச்சையில் முதலுதவி அல்லது முதல்கட்டமாகச் சிகிச்சை அளிக்கப்படும் நேரம் மிகவும் முக்கியமானது. இந்த பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து நான்கரை மணி நேரத்துக்குள் சிகிச்சை தரப்படும்போது, நோயாளிக்கு மூளையில் ஏற்படும் பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்க முடியும்.
* தகவல் அறிந்து நோயாளியின் வீட்டுக்கு மருத்துவக்குழுவினர் வந்ததும், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இதயத்துடிப்பு, சுயநினைவுத்திறன் ஆகியவற்றை முதலில் சரிபார்த்து, மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு அலுவலருக்கு நோயாளியின் நிலை குறித்த தகவல்கள் உடனடியாகத் தெரிவிக்கப்படும். இந்த விவரங்களின்படி, நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்குள் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கத் தயார் நிலையில் இருப்பார்கள்.