இனிப்பு சாப்பிடுவதற்கும் நீரிழிவு பாதிப்புக்கும் நேரடி தொடர்பில்லாவிட்டாலும் இப்படி மறைமுக ஆபத்து இருக்கிறது. ஒரு நபர் உடல் பருமனோடு இருக்கிறார், அவரின் பெற்றோரில் ஒருவருக்கோ, இருவருக்குமோ நீரிழிவு இருக்கிறது என்ற நிலையில், அதன் விளைவாக நீரிழிவு வரக்கூடும்.
எனவே, இனிப்பு சாப்பிடும் அளவை ஆரம்பத்திலேயே குறைத்துவிடுவதன் மூலம் உடலில் கலோரிகள் சேர்வதும் உடல் பருமனாவதும் தடுக்கப்படும். நீரிழிவு அபாயம் குறையும்.
தேவையைவிட அதிக கலோரிகள் எடுத்துக்கொள்ளும்போது அது உடலில் கொழுப்பாகப் போய்ச்சேரும். அது நீரிழிவுக்கு வழிவகுக்கும் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.