NZ v PAK முதல் அரையிறுதி: மீண்டும் `92 கனவில் பாகிஸ்தான்; நியூசிலாந்து அதற்குத் தடைபோடுமா? | T20 World Cup 2022: Newzealand vs Pakistan Semi final Preview

Share

பாபர் அசாம் & ரிஸ்வான்

பாபர் அசாம் & ரிஸ்வான்
Pakistan Cricket

இருவருமே சொதப்புவதால் பேட்டிங்கில் பாகிஸ்தானுக்கு ஒரு மொமண்டம் கிடைப்பதே இல்லை. இவர்கள் இருவருமே அரையிறுதியில் ஃபார்முக்குத் திரும்பியாக வேண்டும்.

நியூசிலாந்து அணியை பொறுத்தவரைக்கும் ஆடியிருக்கும் 4 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் பவர்ப்ளேக்குள்ளாகவே 50 ரன்களைக் கடந்திருக்கின்றனர். மற்ற இரண்டு போட்டிகளிலும் பவர்ப்ளேயில் சுமாராகவே ஆடியிருக்கின்றனர். சிறப்பாக ஆடிய இரண்டு போட்டிகளிலுமே ஃபின் ஆலன் ஒரு அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்திருக்கிறார். அவர் சரியாக ஆடாவிட்டால் நியூசிலாந்துக்கு மந்தமான தொடக்கமே கிடைக்கிறது. ஓப்பனிங்கில் ஆலன் என்றால் மிடில் ஆர்டரில் க்ளென் பிலிப்ஸ் வெழுத்தெடுக்கிறார். இவர்கள் இருவரும்தான் நியூசிலாந்து அணியின் துருப்புச் சீட்டுகள். இவர்களைத் தவிர கான்வே ஒரே ஒரு போட்டியில்தான் நன்றாக ஆடியிருக்கிறார். வில்லியம்சன் கடைசி போட்டியில்தான் ஃபார்முக்கே வந்திருக்கிறார். அரையிறுதியில் இவர்களும் சிறப்பாக ஆடியாக வேண்டும்.

பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் – ரிஸ்வான் என இருபெரும் வீரர்கள் சரியாக ஆடாதபட்சத்திலும் அந்த அணி கடைசி 3 போட்டிகளில் வென்றிருக்கிறது. காரணம், முகமது ஹாரிஸ், இஃப்திகார், ஷதாப் கான் ஆகியோர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சிறப்பாக ஆடி வருகின்றனர். ஷதாப் கான் ஒரு ஆல்ரவுண்டராக கேம் சேஞ்சராக மிளிர்கிறார்.

1992-ல் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி மெல்பெர்னில் வைத்தே உலகக்கோப்பையை வென்றிருந்தது. இந்த முறையும் இறுதிப்போட்டியில் மெல்பெர்னில் வைத்து அதேமாதிரியானதொரு சம்பவத்தை நிகழ்த்த வேண்டும் என்பது பாகிஸ்தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. எப்போதும் குறைந்தபட்சமாக நாக் அவுட் வரையாவது சென்றுவிடும் நியூசிலாந்து இந்த முறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்பது அந்நாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டுமெனில், முதலில் அரையிறுதி என்னும் தடையைத் தாண்டியாக வேண்டும்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com