ஆனால் நாம் என்னதான் முயற்சி செய்தாலும் வீடுகளில் செய்யப்படும் பிரியானியானது கடைகளில் கிடைக்கும் பிரியாணியைவிட எப்போதும் சுவை குறைவாகவே இருக்கும். எனவே வீட்டிலேயே குஸ்கா பிரியாணி எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். இதை சரியாக செய்தீர்கள் என்றால் ஹோட்டல்களில் கிடைப்பதை விட சுவையும் தரமும் அதிகமாகவே இருக்கும்.

செய்முறை:
பிரியாணி செய்யப்போகும் அரிசியை நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, அதன் பின் கொதிக்க வைக்கவேண்டும். அதன் பிறகு அதில் உள்ள நீரை வடித்து விட்டு அரிசியை பாத்திரத்தோடு சேர்த்து தனியாக வைத்து விட வேண்டும்.
இப்போது குஸ்கா பிரியாணி செய்வதற்கு தேவையான மசாலாக்களை தயார் செய்ய வேண்டும். நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை நெய்யுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பழுப்பு நிறத்தில் வரும் வரை வதக்கிய பிறகு, நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு, மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் ஆகிய மசாலாக்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் . தக்காளி நன்றாக வதங்கிய பிறகு அதனுடன் தேவையான அளவு தயிரை சேர்த்து இன்னும் நன்றாக கலக்க வேண்டும். அதன் பின்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
இவை அனைத்தும் சரியாக செய்து முடித்த பின் ஏற்கனவே எடுத்து வைத்த அரிசியை இந்த மசாலாக்கள் அடங்கிய கலவையுடன் சேர்த்து இன்னும் சிறிது நேரம் சமைக்க வேண்டும். சரியான பதத்துடன் வந்ததும் நாம் பாத்திரத்தை இறக்கி விடலாம்.
இப்போது சுவையான தரமான தென்னிந்திய குஸ்கா பிரியாணி தயார். நீங்கள் விரும்பினால் இதனோடு உங்களுக்கு பிடித்த வெங்காய பச்சடி அல்லது வேறேதேனும் கிரேவி வகைகளுடன் சேர்த்து பரிமாறினால் சுவை என்னும் கூடுதலாக இருக்கும்.
Also Read : பாலைவனத்தில் பிறந்த பிரியாணியின் வரலாறு… அனைவருக்கும் பிரியமான உணவாக மாறியது எப்படி?
இப்படி பிரியாணி செய்வதில் பல நன்மைகள் உள்ளன. பிரியாணி சாப்பிட ஆர்வமாக உள்ள சைவர்களுக்கு, இந்த குஸ்கா பிரியாணி மிகச்சிறந்த ஒரு மாற்றாக அமையும். ஏனெனில் நாம் செய்த குஸ்கா பிரியாணி, இறைச்சி சேர்த்து செய்தால் எந்த சுவையில் இருக்குமோ கிட்டத்தட்ட அதே போன்று சுவையை கொடுக்கும். மேலும் அவசர நேரத்தில், மிக நீண்ட நேரம் சமையல் அறையில் செலவழித்து உணவை சமைக்க விரும்பாதவர்கள் இந்த முறையில் பிரியாணி செய்து நேரத்தை சேமிப்பதுடன், சுவையான பிரியாணி செய்ததற்காக நற்பெயரையும் பெற முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.