ICC T20 WC: `இதுக்கு இவ்ளோ அபராதமா?' பொங்கும் நெட்டிசன்கள்; மாட்டிக்கொண்ட கிரிக்கெட் ரசிகர்!

Share

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் T20 உலகக்கோப்பைப்    போட்டியில் நேற்று (6.11.2022) இந்தியா –  ஜிம்பாப்வே அணிகள் மோதின. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தோல்வியைத் தவிர, இந்திய அணி இந்த T20 உலகக் கோப்பைப் போட்டியில்   சிறப்பாகவே விளையாடி வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 186 ரன்களைக் குவித்த இந்திய அணி, அபார வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரம், ஜிம்பாப்வே அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை என்றாலும், இந்த உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. 

இந்தியா- ஜிம்பாப்வே போட்டியின் போது

இதனிடையே இந்தியா – ஜிம்பாப்வே போட்டியின் நடுவே நடந்த சம்பவம் ஒன்று அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவைச் சந்திக்க ஆர்வத்தில் இளம் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்திருக்கிறார். ஆனால் மைதானத்திலிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் ரோஹித் சர்மாவை நெருங்கவிடாமல் அவரை தடுத்து நிறுத்திவிட்டனர். மேலும் மைதானத்தில் பார்வையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கத்தை மீறியிருக்கிறார் என்று அந்த நபருக்கு ரூ.6.5 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த நடவடிக்கைக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com