பாலியல் வன்கொடுமை புகார்: இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக கைது | sexual assault complaint sri lankan cricketer dhanushka gunathilaka arrested

Share

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி பங்கேற்றது. இந்நிலையில், இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக மீது, கடந்த 2-ம் தேதி சிட்னியைச் சேர்ந்த 29 வயது பெண், பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார்.

சிட்னி கிழக்குப் பகுதியில் உள்ள ரோஸ் பேவிலுள்ள வீட்டில் அவரை குணதிலகா பாலியல் வன்கொடுமை செய்ததாகவும். அது தொடர்பான புகாரில் குணதிலக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதை சிட்னியில் உள்ள நியூ சவுத்வேல்ஸ் காவல் நிலையம் உறுதி செய்துள்ளது.

ஜாமீன் கோரி குணதிலக நீதிமன்றத்தை அணுகியதாகவும், ஆனால் ஜாமீன் மறுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதனிடையே, குணதிலக இல்லாமலேயே இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் இருந்து தாயகத்துக்குப் புறப்பட்டது.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com