டி20 உலகக் கோப்பை 2022: உலகக்கோப்பை கனவை நனவாக்குமா இந்தியா? பாகிஸ்தானுக்கு வாய்ப்பு எப்படி இருக்கிறது?

Share

  • அஷ்ஃபாக்
  • பிபிசி தமிழ்

இந்திய அணி

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமையுடன் சூப்பர் 12 ஆட்டங்கள் முடிவடைந்து அரையிறுதியில் மோதப் போகும் அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

முதல் அரையிறுதி ஆட்டம் சிட்னி மைதானத்தில் வரும் 9ம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது. இதில் குரூப் 1 பிரிவில் முதலிடம் பிடித்த நியூசிலாந்தும் குரூப் 2 பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த பாகிஸ்தானும் மோதுகின்றன. மறுநாள், அதாவது 10ம் தேதி வியாழக்கிழமை அடிலைட் மைதானத்தில் 2வது அரையிறுதி நடைபெறுகிறது. இதில் குரூப் 2 சுற்றில் முதலிடம் பிடித்த இந்தியாவும் குரூப் 1 சுற்றில் இரண்டாம் இடம் பிடித்த இங்கிலாந்தும் விளையாடுகின்றன.

இங்கிலாந்த் அணி எப்படி?

நடப்பு டி20 தொடரில் இங்கிலாந்து அணி 5 போட்டிகளில் விளையாடியது. இதில் நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. அயர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பான கம்பேக்கை கொடுத்தது. இதுதவிர, ஆஸ்திரேலியா உடனான ஆட்டம் மழையால் ரத்தானது. இந்த தொடரில் இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சமாக அலெக்ஸ் ஹேல்ஸ் 4 போட்டிகளில் விளையாடி 125 ரன்களையும், ஜாஸ் பட்லர் 119 ரன்களையும் சேர்த்துள்ளனர். இது இந்தியாவுடன் ஒப்பிடும்போது மிக மிக குறைவு.

டேவிட் மாலன் பேட்டிங்கில் கணிசமான ரன்களை சேர்க்கிறார். ஆனால் அவர் தற்போது காயத்தால் அவதிப்பட்டு வருவது அணிக்கு பின்னடைவை தந்துள்ளது. அரையிறுதியில் அவர் விளையாடாத பட்சத்தில் அது இந்தியாவுக்கு சாதகமாக அமையக்கூடும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com