ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை ஆவின் பால் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்

Share

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 அளவுக்கு குறைத்தது திமுக, தற்போது, 1 லிட்டர் ஆரஞ்சு பால் பாக்கெட் விலை அட்டைதாரர்களுக்கு 46 ரூபாய்க்கும், சில்லரை விலையில் வாங்குபவர்களுக்கு 48 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதை இன்று (நேற்று) முதல் ஒரு லிட்டர் 60 ரூபாய் என ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது. ஒரு லிட்டர் பால் விலை 12 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில், கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தித் தர வேண்டுமென்று விவசாயிகளும், பால் விற்பனையாளர்களும் கோரிக்கை விடுத்த நிலையில், லிட்டருக்கு மூன்று ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. பால் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்யவும், கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com