T20 World Cup: W-W-W அசத்திய அயர்லாந்து வீரர்; இந்த உலகக்கோப்பையின் இரண்டாவது ஹாட்ரிக் சம்பவம்! | T20 World Cup – Ireland Bowler Little takes hat-trick against Newzealand

Share

நியூசிலாந்து அணியே முதலில் பேட்டிங் செய்தனர். ஃபின் ஆலன் ஓர்அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்திருந்தார். பின்னர் நியூசிலாந்து அணியின் ரன் வேகத்தில் சுணக்கம் ஏற்பட்டது. கேப்டன் வில்லியம்சன் நின்று அடிக்கவே நியூசிலாந்து கொஞ்சம் மீண்டு வரத் தொடங்கியது. ரன்ரேட்டும் வேகம் பிடித்தது. எந்த பிரச்னையும் இல்லாமல் வில்லியம்சன் அப்படியே தொடர்ந்திருந்தால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 200 ரன்களைக் கடந்திருக்கக்கூடும். ஆனால், அப்படி நடக்கவில்லை.

61 ரன்களில் செட்டில் ஆகி நின்று அதிரடியைக் காட்டத் தொடங்கியிருந்த வில்லியம்சன், நீஷம், சாண்ட்னர் என மூன்று பேரின் விக்கெட்டையும் அடுத்தடுத்து வீழ்த்தியிருந்தார். ‘கடைசி 2 ஓவர்களில் நியூசிலாந்து 25 ரன்களை எடுப்பார்கள் என நினைத்தேன். ஆனால், அவர்கள் தடுமாறிவிட்டார்கள்’ என ரவி சாஸ்திரி கமென்ட்ரியில் பேசியிருந்தார். நியூசிலாந்துக்கு அந்தத் தடுமாற்றத்தை ஹாட்ரிக் மூலம் கொடுத்தது லிட்டில்தான்!

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இது ஆறாவது ஹாட்ரிக் சம்பவம். இந்த உலகக்கோப்பையில் இது இரண்டாவது சம்பவம். லிட்டிலுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் எடுத்திருந்தார். மேலும், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அயர்லாந்து சார்பில் எடுக்கப்படும் இரண்டாவது ஹாட்ரிக் இது. இதற்கு முன் கடந்த உலகக்கோப்பையில் அயர்லாந்து அணியின் கேம்பர் ஹாட்ரிக் எடுத்திருந்தார். வேறெந்த அணியும் இரண்டு முறை ஹாட்ரிக் எடுத்ததே இல்லை!

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com