டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல். ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். ரோகில் சர்மா 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டம் இழந்தார். இதையடுத்து விராத் கோலி களம் புகுந்தார். இந்த இணை பொறுப்பாக விளையாடி துரிதமான ரன் சேர்க்கையில் ஈடுபட்டது.
Bangladesh lose two quick wickets after the rain break 😯#T20WorldCup | #INDvBAN | 📝: https://t.co/vDRjKeeGvf pic.twitter.com/eOrgwV0y8r
— ICC (@ICC) November 2, 2022
கேஎல் ராகுல் 32 பந்துகள் சந்தித்து 50 ரன்கள் எடுத்தார். அக்ஷர் படேல் 7 ரன்களுக்கும், ஹர்திக் பாண்டியா 5 ரன்களுக்கும், சூர்யகுமார் யாதவ் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்தார். ஒட்டுமொத்தமாக 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 184 ரன்கள் எடுத்தது. 185 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பங்களாதேஷ் களமிறங்கியது. தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது வங்கதேசம். விக்கெட் இழப்பு ஏதுமின்றி 7ஓவருக்கு 66 ரன்கள் எடுத்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.
பின்னர் மழைவிடும் வரை வீரர்கள் காத்திருந்த நிலையில் மீண்டும் ஆட்டம் தொடங்கியுள்ளது. மழையால் மொத்த ஓவர் 16 குறைக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்துக்கு இலக்கு 151 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழைக்கு முன்பு வரை அதிரடியாக ஆடிய வங்கதேசம் மழைக்கு பிறகு சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மழைக்கு பிறகான மைதான மாற்றத்தால் பேட்டிங்கில் வங்கதேசம் தடுமாறியது. இறுதியில் 16 ஓவருக்கு 145 ரன்கள் எடுத்து வங்கதேசம் தோல்வியை தழுவியது.
Published by:Murugadoss C
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.