டி20 உலகக் கோப்பை: விராட் கோலி அடித்த ‘டெண்டுல்கர் சிக்ஸர்’ – மீண்டும் இந்தியாவைத் தாங்கிப் பிடித்த தருணம்

Share

கோலி

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். 16 ரன்களை எடுத்திருந்தபோது உலகக்கோப்பை டி20 போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

இதற்கு முன்பாக இலங்கையின் மஹேல ஜெயவர்த்தன 1016 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது.

முன்னதாக டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீசத் தீர்மானித்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ரோஹித் சர்மாவும், கே.எல். ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினார்கள்.

கடந்த மூன்று போட்டிகளிலும் சரியாக ஆடாத கே.எல். ராகுல் மீது கடுமையான விமர்சனம் இருந்த நிலையில், வங்கதேசத்துடனான போட்டியில் அவர் அந்த விமர்சனத்தைப் போக்கும் வகையில் சிறப்பாக ஆடினார். எனினும் மறு முனையில் கேப்டன் ரோஹித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com