Doctor Vikatan: பால் குடிக்கும் பெண்களுக்கு உடல் எடை | Doctor Vikatan: Do women who drink milk gain weight?

Share

கால்சியம் சத்தை உறிஞ்சுவதற்கு உங்கள் உடலுக்கு வைட்டமின் டி சத்தும் தேவைப்படுகிறது. உங்கள் எலும்புகள், தசைகளையும் மற்றும் இதயத்தையும், ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க கால்சியம் தேவை. இளவயதில் போதுமான கால்சியம் மற்றும் வைட்டமின் டி கிடைக்காதவர்களுக்கு, பிற்காலத்தில் அவர்களின் எலும்புகள் மென்மையாகி, உடைந்துபோக (ஆஸ்டியோபொரோசிஸ்) வாய்ப்புகள் அதிகம். தினமும் 20 நிமிடங்கள் காலை அல்லது மாலை இளம் வெயிலில் நிற்பதன் மூலம் வைட்டமின் டி சத்தைப் பெறலாம். பைடிக் அமிலம் மற்றும் ஆக்ஸாலிக் அமிலம் நிறைந்த உணவுகள், நம் உடலில் கால்சியம் உறிஞ்சுதலைத் தடுக்கும் திறன் கொண்டவை என்பதால் அவற்றை எடுத்துக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும்.

ஐசிஎம்ஆரின் பரிந்துரையின்படி, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கைமுறை கொண்ட பெண்களுக்கு ஒரு நாளைக்கு 1,000 மில்லிகிராம் கால்சியம் தேவைப்படுகிறது, அதை உணவின் மூலமே பெற்றுவிட முடியும். அரிதாக, சிலருக்கு கால்சியம் சத்தை உட்கிரகிப்பதில் பிரச்னைகள் இருக்கக்கூடும். அவர்களுக்கு மருத்துவ ஆலோசனையோடு சப்ளிமென்ட் பரிந்துரைக்கப்படும்.

வொர்க்அவுட் செய்யும் பெண்கள் பாலில் குறிப்பிட்ட சதவிகித கொழுப்பு இருப்பதால் அதைத் தவிர்க்க அறிவுறுத்தப் படுகிறார்கள். உங்கள் உணவில் தினசரி கொழுப்பு மற்றும் கலோரி அளவை அதிகரித்தால் மட்டுமே பால் உங்கள் எடையை அதிகரிக்கச் செய்யும். மற்றபடி பால் மட்டுமே உங்கள் எடையை அதிகரிக்காது. விலங்குகளிடமிருந்து பெறப்படும் பாலில் கொழுப்பு அதிகமிருக்கும். அதுவும் ஒவ்வோர் உயிரினத்துக்கும் வேறுபடும். பால் எடுத்துக்கொள்வதுடன் சமச்சீர் உணவுகளைச் சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் உடல் எடையை சரியாக நிர்வகிக்க முடியும். பெண்கள் தங்கள் அன்றாட உணவில் பால் சேர்த்துக்கொள்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், அது அளவைத் தாண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குறைந்த கொழுப்புள்ள பாலை மட்டும் பயன்படுத்துங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com