இந்திய அணியினர் உலகக்கோப்பையை வெல்ல வந்துள்ளனர்; ஆனால் நாங்கள்! – பங்களாதேஷ் கேப்டன் ஷகிப் அல் ஹசன்|Bangladesh didn’t come to win T20 World Cup, will try and upset ‘favourites’ India: Shakib Al Hasan

Share

பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகளுடன் மோதி தொடர் வெற்றியைப் பெற்று வந்த இந்தியா தென்னாப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்தது. இதனைத்தொடர்ந்து வங்கதேச அணிக்கும் இந்தியாவிற்கும் நாளை (2.10.2022) போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் “இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. எங்கள் திட்டங்களில் நாங்கள் கவனம் செலுத்த விரும்புகிறோம். இந்தியா அல்லது பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைத்தால், அது வருத்தமான விஷயமாகத்தான் இருக்கும். காரணம் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் எங்களைவிட சிறந்த அணிகள்.

ஷகிப் அல் ஹசன்

ஷகிப் அல் ஹசன்

அதற்காக எங்களால் வெற்றி பெற முடியாது என்று நான் சொல்லவில்லை. அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தியதை நாங்கள் பார்த்திருக்கிறோம். எங்களாலும் அவ்வாறு செய்ய முடிந்தால் நான் மகிழ்ச்சியடைவேன். இந்தியா எங்கே விளையாடினாலும், ரசிகர்கள் அவர்களுக்கு சிறப்பான ஆதரவைக் கொடுக்கிறார்கள். இதனால் இரு அணிகளுக்கும் நாளை நடைபெற இருக்கும் போட்டி சுவாரசியமாக இருக்கும். இந்திய அணியினர் உலகக்கோப்பையை வெல்ல இங்கு வந்துள்ளனர். நாங்கள் அதற்காக இங்கு வரவில்லை. நாளைய போட்டியில் இந்தியாவை வீழ்த்த முயற்சி செய்வோம்” என்று கூறியிருக்கிறார்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com