நடிகர் மனைவியின் திடீர் மரணம்… உயிரைப் பறித்ததா பேலியோ டயட்? மருத்துவர் தரும் விளக்கம்! | Is the paleo diet killing you – doctor explains

Share

கன்னட திரையுலகில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமானவர் பரத் கல்யாண். 2007-ம் ஆண்டு, சிருங்காரம் எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரவேசித்தார். தொடர்ந்து வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா, கனாக் காணும் காலங்கள் ஆகிய தொடர்களிலும், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், ஜமீலா என்ற தொடரிலும் நடித்து வருகிறார். இவரின் மனைவி பிரியதர்ஷினி (43). இவர் உடல் எடையைக் குறைக்க பேலியோ டயட் எனும் உணவுக்கட்டுப்பாடு முறையைப் பின்பற்றி வந்துள்ளார். இந்நிலையில், இதனால் தீவிர உடல் பாதிப்புக்குள்ளான இவர் நேற்று (31.10.22) அதிகாலை 5 மணியளவில் இறந்துள்ளார்.

பேலியோ டயட்டை பொறுத்தவரை காய்கறிகள், நட்ஸ், இறைச்சி ஆகியவற்றை உட்கொள்ளலாம். ஆனால், பால் மற்றும் பாலில் தயாரிக்கப்படும் உணவுகள், பழங்கள் இவற்றைத் தவிர்க்க வேண்டும். கற்கால உணவு முறை என்று பலரும் இந்த டயட்டில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இவரது இறப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, பேலியோ டயட்டில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், பேலியோ டயட்டால் ஏன் மரணம் ஏற்படுகிறது என்பது பற்றி சென்னையைச் சேர்ந்த உணவியல்ஆலோசகரான சங்கீதா ஜெயக்குமாரிடம் பேசினோம்.

“பேலியோ டயட் முறையைக் கடைப்பிடிப்பதற்கு முன்னர், ஒரு விரிவான ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அந்த ரத்தப் பரிசோதனையில் கொளஸ்ட்ரால் அளவு, கிரியாட்டினின் (creatinine) எனப்படும் புரோட்டின் அளவு ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். மெட்டபாலிசம் அளவை சரிபார்க்க வேண்டும். ஒருசிலருக்கு மெட்டபாலிசம் அளவு குறைவாக இருப்பதால், ஜீரணம் ஆக அதிக நேரம் எடுக்கும். அதோடு உடல் எடையைக் குறைப்பதும் அவர்களுக்கு எளிதாக இருக்காது.

பேலியோ டயட்டை கடைப்பிடிக்கும் முன், உணவியல் ஆலோசகரிடம் உடல் எடைக்குத் தக்க புரோட்டின் உணவுகள் குறித்த வழிகாட்டுதல்களைப் பெற வேண்டும். நிபுணரின் வழிகாட்டுதல் இன்றி இந்த பேலியோ டயட்டை ஒருபோதும் கடைப்பிடிக்கக் கூடாது. இன்று, மருத்துவர்கள் முதல், உடல் எடை குறைய வழிகாட்டும் நிறுவனங்கள் வரை பேலியோ டயட் முறையை சிபாரிசு செய்கின்றனர். பேலியோ டயட்டை கடைப்பிடிக்கப் போகும் ஒருவரின் மெட்டபாலிக் அளவுக்கு ஏற்றாற்போல் அந்த டயட் இருக்க வேண்டும் என்பதைப் பலரும் கவனிக்க மறந்துவிடுகிறார்கள். அதற்கு ஏற்பதான் டயட் சார்ட் தயாரிக்கப்பட வேண்டும்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com