குஜராத் பாலம்: நரேந்திர மோதியின் எழுச்சிக்கு உரமிட்ட மோர்பி, மச்சு ஆறு – அறியப்படாத தகவல்கள்

Share

  • ரெஹான் ஃபசல்
  • பிபிசி இந்தி

1979 வெள்ளத்திற்குப் பிறகு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் உதவிக்கு வந்தனர்

பட மூலாதாரம், Sondeep Shankar

படக்குறிப்பு,

1979 வெள்ளத்திற்குப் பிறகு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் உதவிக்கு வந்தனர்

மோர்பி, மச்சு நதி மற்றும் பிரதமர் நரேந்திர மோதி இடையேயான உறவு மிகவும் பழமையானது. நரேந்திர மோதி பொது வாழ்வில் முத்திரை பதிக்கத் தொடங்கிய இடம் மோர்பி.

அந்த நகரில் மோதி என்ன செய்தார்? அது அவரது வளர்ச்சிக்கு எப்படி உதவியது? இவை பற்றி விவரிப்பதற்கு முன், சுமார் 43 ஆண்டுகளுக்கு முன்பு மோர்பியில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வோம்.

11 ஆகஸ்ட் 1979 – ராஜ்கோட் அருகே உள்ள மோர்பி நகரத்தில், ஜூலை மாதம் மழை பெய்யவில்லை, ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் அந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கியது. மோர்பி அருகே பாயும் மச்சு ஆற்றில் இரண்டு அணைகள் கட்டப்பட்டன. மச்சு ஆற்றில் 22.56 மீட்டர் உயரமுள்ள இரண்டாவது அணை 1972இல் கட்டி முடிக்கப்பட்டது. ஆகஸ்ட் 10, 1979 அன்று மாலையில், மச்சு ஆற்றின் அணை எண்-1இல் இருந்து நீர் திறக்கப்பட்டது.

இதையடுத்து, அணை எண்-2இன் இரண்டு கதவுகளையும் திறக்க முற்பட்டபோது தொழில்நுட்ப காரணங்களால், அவை திறக்க முடியாமல் போயின. இதனால் அணையின் நீர் தேக்கத்தில் உபரி நீர் தேங்கியது. இதனால், அணையின் வழியாக பாயும் தண்ணீர் மிக வேகமாக, அதிக அளவில் வெளியேறத் தொடங்கியது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com