அரசு பள்ளிகளில் மழைக்கால பணிகளுக்கு அரசு நிதி வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

Share

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவு: வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், அரசு பள்ளிகளில் மழைக்கால விபத்துகள், பாதிப்புகளை தடுக்கும் வகையிலான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும்படி பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அதற்கான நிதி வழங்கப்படவில்லை. இப்பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்படி ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். இந்த நிதி, நடப்பாண்டில் இதுவரை வழங்கப்படவில்லை. சில பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்களின் சொந்த பணத்தைக் கொண்டு இந்த பணிகளை செய்கிறார்கள். அவ்வாறு செய்யப்படாத பள்ளிகளில் மழைக்காலத்தில் ஏதேனும் விபத்துகள் நடந்தால் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆபத்துகள் ஏற்படக்கூடும். அது தவிர்க்கப்பட வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்படி அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை பள்ளிக்கல்வித்துறை உடனடியாக விடுவிக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com